Dec-20,2020
குவைத் விமான போக்குவரத்து துறை இந்தியாவில் இருந்து முதல்கட்டமாக வீட்டுத் தொழிலாளர் நேரடியாக நுழைய அனுமதி வழங்கியும் பல்வேறுபட்ட காரணங்களால் கடந்த நவம்பர்-14 தேதி, இந்தியாவின் சென்னையில் இருந்து தொழிலாளர்களுடன் கிளம்ப வேண்டிய முதல் குவைத் ஏயர்வேஸ் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 15-ஆம் தேதி அதிகாலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 61வீட்டுத் தொழாலாளர்களுடன் முதல் குவைத் ஏயர்வேஸ் விமானம் குவைத் வந்தடைந்தது.
இந்நிலையில் இரண்டு நாடுகளின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தையின் முடிவில்,இந்தியாவில் இருந்து வீட்டுத் தொழிலாளர்களுடன் திரும்புவதற்கான முதல் குவைத் ஏர்வேஸ் விமானம் புதன்கிழமை(23/12/20) திட்டமிடப்பட்டுள்ளது, அதன்பிறகு மற்றொரு ஜசீரா ஏர்வேஸ் விமானம் வெள்ளிக்கிழமை(25/12/20) இந்தியாவில் இருந்து புறப்படும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இரண்டு நாடுகளின் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தையின் முடிவில் குவைத்தின் தேசிய விமானங்களை போலவே,
பயணிகளை ஏற்றிச்செல்ல இந்தியாவின் தேசிய விமானங்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் விடுத்த கோரிகையின், காரணமாக இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் விமானங்களில் குவைத்திற்கு திரும்பத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளன.
மேலும் நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவில் இருந்து குவைத்துக்கு வரும் வீட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஒரு நாளைக்கு 400 பயணிகளை ஒதுக்க ஒப்புக் கொண்டதாக சம்பந்தப்பட்ட வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது, இதில் குவைத் தேசிய விமானங்களான குவைத், அல் ஜசீரா ஏயர்வேஸ்ள் 200 பயணிகளையும் மற்றும் இந்திய தேசிய விமானங்களான எயர் இந்தியா மற்றும் இந்தியன் எயர்லைன்ஸ் 200 பயணிகள் என்ற விகிதத்திலும் பயணிகளை அழைத்துவரும் என்று தெரிகிறது.
மேலும் குவைத் அரசு சுகாதாரத்துறை பணியாளர்கள், அவர்களின் முதல் நிலை உறவினர்கள், தனியார் மருத்துவ ஊழியர்களும் உள்ளிட்டவர்கள் குவைத் திரும்புவதற்கு முன்னரே அனுமதி வழங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே......