Dec-20,2020
சவுதியில் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த உடல் இந்தியரின் சடலம் என்ற இன்று டையாளம் காணப்பட்டது. உயிரிழந்தவர் கொல்லம் புனலூரைச் சேர்ந்த நவாஸ் ஜமால்(வயது-48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சமூக ஆர்வலர் நாசர்வக்கத் தலைமையிலான நண்பர்கள் நடத்திய பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு சடலம் அடையாளம் காணப்பட்டது. நேற்று உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தமாமாமின் மேற்கு காவல் நிலையத் அதிகாரி இகாமாவைச் சரிபார்த்து,இறந்தவர் இந்தியர் என்பதை அறிந்ததும் நாசர்வக்கத் அவர்களை தொடர்பு கொண்டார்.
அவர் ஒரு இந்தியர் என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து, ஜவாசத்தில் இருந்து பாஸ்போர்ட் எண்ணை சேகரித்து, தொடர்ந்து தூதரகத்திலிருந்து, நாட்டில் உள்ள முகவரியைக் கண்டுபிடித்தனர்,இதையடுத்து புகைப்படத்தை புனலூர் போலீசாருக்கு அனுப்பி தொடர்பு கொண்டனர்,ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சவுதி போலீசார் விரிவான விசாரணை நடத்தி உள்ளூர் Sponsore-ஜ தொடர்பு கொண்டனர்.
இந்த நேரத்தில் தனது சொந்த ஊரைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர் வினயனும், ரியாத்தைச் சேர்ந்த ஷாஜகானும் நாஜ்வாக்கைத் தொடர்பு கொண்டனர், தொடர்ந்து உடல் அடையாளம் காணப்பட்டது. பிரேத பரிசோதனை உள்ளிட்ட நடைமுறைகளை முடித்த பின்னர் குடும்பத்தின் விருப்பப்படி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.