BREAKING NEWS
latest

Wednesday, December 30, 2020

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு


இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்தொற்று பரவல் காரணமாக விமான சேவையும் மார்ச் 23ம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட தடை உத்தரவு பலமுறை நீட்டிக்கப்பட்டு நவம்பர் மாதம் இறுதி வரை சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

இருந்தபோதும் சரக்கு சேவை விமானங்களுக்கும், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும், இந்தியாவில் சிக்கியிருந்த வெளிநாட்டினரை அவரவர் தாய்நாட்டில் கொண்டு சேர்க்கவும் வந்தே பாரத் என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன. மேலும் வ‌ளைகுடா உள்ளிட்ட நாடுகளில் புதிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோன தொடர்பான பிரச்சினைகள் இல்லாத நிலையில் Air-Bubble ஒப்பந்தம் அடிப்படையில் வந்தே பாரத் விமானங்கள் தொடர்ந்து இயங்கும்.

(Photo Credit: DGCA)

இந்நிலையில் இன்று மீண்டும் புதிதாக சிவில் விமான போக்குவரத்துத் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வேதேச விமான போக்குவரத்துக்கான தடை 2021,ஜனவரி 31-ம் தேதி நீட்டிப்பு செய்ததாகஅறிவித்துள்ளது. மேலும் சரக்கு விமானங்களின் சேவை வழக்கம் போல் தொடரும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.



Add your comments to இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

« PREV
NEXT »