Dec-14,2020
குவைத்தின் இந்திய தூதர் சி.பி ஜார்ஜ் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை குவைத் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) தலைவர் ஷேக் சல்மான் அல்-ஹோமூத் அல்-சபாவுடன் சந்தித்து கலந்துரையாடினார். இருவரும் இருதரப்பு உறவுகள், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து, குறிப்பாக சிவில் விமானப் போக்குவரத்து துறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதித்தன.
மேலும் கோவிட் நோய்தொற்று குவைத்தில் அதிகமாக பரவிய நிலையில் இந்தியா உட்பட 34 நாடுகளில் இருந்து பயணிகள் நேரடியாக நுழைவதை நிறுத்தியுள்ளது. இந்நிலையில
கடந்த வாரம் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) அனைத்து சுகாதார அமைச்சக ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் இந்த நாடுகளில் இருந்து நுழைய அனுமதிக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
தொடர்ந்து நேற்று தனியார் துறை மருத்துவ ஊழியர்களை அனுமதிக்க மற்றொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இருப்பினும், குவைத்தில் தனியார் துறைகளில் பணிபுரியும் ஏராளமான வெளிநாட்டினர் நாட்டிற்கு நேரடியாக நுழைவதற்காக குவைத் விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கைக்காக இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.