Dec-20,2020
இந்தியா திரும்புவதற்காக ரியாத் விமான நிலையம் செல்லும் வாகனத்தில் திரும்பும் வழியில் இந்தியர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.கேரளா பாலக்காட்டின் மன்னர்க்காடு அடுத்த கஞ்சிராபுழ பகுதியைசேர்ந்த பிரதீப்(வயது-41),ரியாத்தில் இருந்து 560 கி.மீ தூரத்தில் உள்ள சூலாவில் வைத்து இறந்தார். தெற்கு சவுதியின், நஜ்ரானில் இருந்து ரியாத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நடந்தது.
மேலும் செய்தியில் ரியாத்துக்கு பஸ் செல்லும் வழியில், சூலாவில் வைத்து தண்ணீர் குடிக்க வாகனத்தில் இருந்து வெளியே சென்றார். தண்ணீர் வாங்கி குடிக்கும்போது திடிரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்தார்.
அவருடைய உடல் சுலே அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. நஜ்ரானில் டிரைவராக இருந்த பிரதீப் நான்கு ஆண்டுகள் கடந்து வீடு திரும்பியுள்ளார். இவருக்கு ரெம்யா என்ற மனைவியும்,ஆதித்யா,அர்ஜுன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளது. சூலாவில் உள்ள சமூக ஆர்வலர்கள் உடலை தாயகம் அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.