BREAKING NEWS
latest

Tuesday, December 22, 2020

குவைத்தின் Rumaithiya சாலையில் சென்ற இந்தியர் திடிரென கீழே விழுந்து உயிரிழந்தார்

Dec-22,2020

குவைத்தின் Rumaithiya பகுதியில் குடிபோதையில்  சாலையில் நடந்து கொண்டிருந்தபோது இந்தியர்
ஒருவர் கீழே விழுந்து இறந்தார் என்று தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

நேரில் பார்த்த சாட்சிகளில் ஒருவர் கூறுகையில் சாலையில் நடந்து செல்லும்போது ஒருவர்
திடிரென கீழே விழுந்தார். தொடர்ந்து அவசரகால பாதுகாப்பு துறை மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார் எனவும், ஆனால் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனை செய்ததில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் முதல்கட்ட அறிக்கையில் இறந்த நபரிடம் இருந்து நீரிழிவு நோய் தொடர்பான மருந்துகள் கைப்பற்றியதன் மூலம், இறப்புக்கு அது காரணமாக இருக்கலாம் என்றும், இது தொடர்பான இறுதி அறிக்கை விரையில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Add your comments to குவைத்தின் Rumaithiya சாலையில் சென்ற இந்தியர் திடிரென கீழே விழுந்து உயிரிழந்தார்

« PREV
NEXT »