குவைத்தின் வெளியுறவு அமைச்சராக மீண்டும் இரண்டாவது முறையாக நியமனம் செய்யப்பட்ட ஷேக் அகமது அல் நாசர் அல் சபா அவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க நட்பும் உறவும் விலைமதிப்பற்றவை என்றும், இரு நாடுகளும் இடையேயான உறவை பலப்படுத்தி அதை இன்னும் திடமாக மாற்றுவதற்காக கைகோர்த்து செயல்படுவோம் என்று அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் இன்று(14/12/2020) திங்கள்க்கிழமை காலையில் ஷேக் சபா அல் காலித் அல் சபா தலைமையிலான புதிய அமைச்சரவையில் மீண்டும் வெளியுறவு அமைச்சராக ஷேக் அகமது அல் நாசர் அல் சபா நியமிக்கப்பட்டுள்ளார்.
குவைத்தின் முன்னாள் பிரதமரும் அமீரின் மருமகனுமான ஷேக் நாசர் அல் முகமது அல் அகமது அல் சபாவின் மகனான ஷேக் அகமது அல் நாசர் அல் சபா கடந்த 2019 நவம்பர் முதல் குவைத்தின் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.