Dec-17,2020
இந்தியாவின் வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் முரளீதரன் அவர்கள் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணமாக மஸ்கட் வந்தடைந்தார். முரளீதரன் ஓமானின் தொழிற்துறை மந்திரி மஹது பவைன் பின் சயீதும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொது இந்திய தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட பூர்வமான தொழில் குடியேற்றம் குறித்து முரளீதரன் அமைச்சருடன் விவாதித்தார். மேல்ம் கோவிட் பரவல் காலத்தில் இந்திய சமூகத்தை சிறப்பாக கவனித்தமைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.
முன்னர் ஓமன் இந்திய தூதர் முனு மகாவீர் அமைச்சரை விமான நிலையத்தில் வரவேற்றார். முரளீதரன் வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக ஓமானுக்கு வருகை தந்துள்ளார். அமைச்சர் ஓமானில் உள்ள இந்திய சமூகத்துடன் இணைந்து புதிதா உருவாக்கப்பட்ட ஓமான்- இந்தியா நட்பு சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பு நடத்துவார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களும் கடந்த சில நாட்களாக வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் தருகிறார். மத்திய அரசின் தூதுக்குழுவின் இந்த பயணம் வளைகுடா நாடுகளுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதன் ஒரு பகுதியாகும் என்று வல்லுனர் கூறுகின்றனர்.