குவைத்தில் வேலைக்காக வந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் அபராதம் செலுத்தி நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது தங்கள் தொழில் விசாக்களை அபராதம் செலுத்தி சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
இதற்கான காரணம் மரபணு மாற்றம் ஏற்பட்ட கோவிட் வைரஸ் பரவியதை அடுத்து இந்த மாதம் டிசம்பர் 21 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை குவைத் விமான நிலையம் மூடப்பட்டதால் காலக்கெடுவை நீட்டிக்க அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், உள்துறை அமைச்சகம் ஒரு பகுதி பொதுமன்னிப்பை அறிவித்தது அதில் சட்டத்திற்கு புறம்பாக உள்ள நபர்கள் அபராதம் செலுத்திய பின்னர் நாட்டைவிட்டு வெளியேறவோ அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக்கிய பின்னர் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 1 முதல் 31 வரை ஆகும், ஆனால் இதற்கிடையில், விமான நிலையத்தை எதிர்பாராத விதமாக மூடியதால் பலருக்கு பயணிக்க முடியவில்லை. இந்த சூழலில், காலக்கெடுவை ஜனவரி 31 வரை நீட்டிக்க உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.