குவைத்தின் Jabriya பகுதியில் தீ விபத்து; 9 பேர் காயம்,ஒருவர் நிலை கவலைக்கிடம்:
குவைத்தின் Jabriya பகுதியில் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் கிடைத்து Salmiya மற்றும் Hawally ஆகிய இடங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயணை கட்டுப்படுத்தும் முறையில் ஈடுபட்டனர்.
வீட்டின் முதல்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, உள்ளே சிக்கிய நபர்களை வீரர்கள் மீட்டனர். இந்த பயங்கர தீ விதத்தில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒருவர் நிலை கவலைக்கிடம் என்றும் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனவும்
அதிகாரிகள் தெரிவித்தனர். லேசாக காயம் ஏற்பட்ட மற்றவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து வழக்குபதிவு செய்து அதிகாரிகள் விசாரணை துவங்கியுள்ளது.