குவைத்தின் தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் பெட்ரோல் பம்புகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என்ற காரணத்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் காரணமாக பஹாஹீல், ரிக்கா, அஹ்மதி, வாப்ரா மற்றும் சபா அல்-அஹ்மத் ஆகிய இடங்களில் உள்ள நிலையங்களில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பான வீடியோவை பலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதையடுத்து வேலைநிறுத்தம் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குப் பிறகு, நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் அதிகாரப்பூர்வ பக்கத்தில் மன்னிப்பு கோரியது.
மேலும் அறிக்கையில் மேற்குறிப்பிட்ட நிலையங்களில் வேலை செய்துவந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஒப்பந்த நிறுவனம் தாமதம் கட்டுவதற்காக காரணம் கண்டறியப்படும் எனவும், சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும், தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கே.என்.பி.சி நிர்வாகம் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.