குவைத்தில் தற்போது நடைமுறையில் உள்ள விமான சேவைகளின் தடை உத்தரவு ஜனவரி 2 முதல் நீக்கப்படும் என்று குவைத் சிவில் ஏவியேஷன் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் குவைத் ஏர்வேஸ் ஜனவரி 2 முதல் ஜனவரி 6 வரை கூடுதல் சிறப்பு விமானங்களை துபாயில் இருந்து இயக்க முடிவு செய்துள்ளது.
துபாயில் சிக்கித் தவிக்கும் குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரைத் திருப்பி அழைத்துவர கூடுதல் விமானங்களுக்கு சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வணிக விமானங்களின் சேவைகளை சுருக்கிய பிறகு குவைத் சர்வதேச விமான நிலையம் ஜனவரி 2 ஆம் தேதி(சனிக்கிழமை) முதல் அதன் செயல்பாடுகளை மீண்டும் தொடர்கிறது.