2021-ஆம் ஆண்டிற்கான விமானங்களின் தரத்தை மதிப்பீடுசெய்யும் APEX அதிகாரப்பூர்வ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐந்து நட்சத்திர மேஜர் ஏர்லைன்ஸ் அந்தஸ்தை குவைத் ஏயர்வேஸ் தொடர்ந்து இண்டாவது முறையாக பெற்றுள்ளது. இதுபோல் கடந்த 2020 ஆம் ஆண்டும் ஐந்து நட்சத்திர அந்தஸ் குவைத் ஏயர்வேஸ்சுக்கு கிடைத்தது.
இதுதொடர்பாக, குவைத் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி அடெல் அல்-சானியா கூறியதாவது:
குவைத் ஏர்வேஸ் 2021 ஆம் ஆண்டிற்கான அப்பெக்ஸ் அதிகாரப்பூர்வ விமான மதிப்பீடு அமைப்பின் ஐந்து நட்சத்திர அந்தஸ்தை இரண்டாவது ஆண்டும் தொடர்ச்சியாக அனைத்து தகுதிகளுடனும் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறது. விமானத் திரைகளில் பயணிகளின் மதிப்பீடு அடிப்படையில் சிறந்த சேவைகளின் தொடர்ச்சியான கிடைத்துள்ளது. இந்த மதிப்பு ப்ளூ பறவைக்கு ஒரு பெரிய சாதனை என்றார்(ப்ளூ பறவை என்பது குவைத் ஏயர்வேஸ் விமானத்தில் வரையப்பட்டுள்ள சின்னத்தை குறிக்கிறது)
விமான இருக்கை வசதி, கேபின் சேவை, உணவு மற்றும் பானம், விமான பயண திட்டங்கள், பொழுதுபோக்கு, வைஃபை சேவை மற்றும் பயணிகளின் முன்னர் உள்ள திரையின் மூலம் விமானப் பயணிகள் தங்கள் மதிப்பீடுகளை பதிவு செய்கிறது. மேலும் பயணிகளிடம் நேரடியாக கருத்துகள் கேட்டறிந்தும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. மேலும் அவர் கூறுகையி்ல் குவைத் ஏர்வேஸின் தொடர்ச்சியான இந்த சாதனை,அதன் அன்பான வாடிக்கையாளருக்கு முழுமையான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தி கடினமா உழைத்ததின் விளைவாக இந்த பாராட்டு வந்துள்ளது என்றார்.