Dec-21,2020
குவைத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் அல்-முஸ்ரிம் அவர்கள் அறிவிப்பை மேற்கோள் காட்டி சற்றுமுன் இந்த செய்தி வெளியாகியுள்ளன.
குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகைதரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதுபோல் நாட்டின் கடல் மற்றும் நில வழி உள்ளிட்ட எல்லைகளையும் தற்காலிக மூடுவதாகவும் அறிவித்துள்ளார். புதிதாக வெடித்துள்ள கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை என்று தெரிகிறது.
டிசம்பர் 21,2020(திங்கள்க்கிழமை) அதாவது இன்று இரவு 11:00 மணி முதல் வருகின்ற ஜனவரி 1, 2021 வெள்ளிக்கிழமை முடிவு இந்த அறிவிப்பு முதல்கட்டமாக நடைமுறையில் இருக்கும்.