Dec-16,2020
குவைத்தில் இன்று(16/12/20) புதன்கிழமை மணிக்கு 60 கி.மீ.க்கு மேல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது, மேலும் தென்கிழக்கு காற்று குவைத்தின் சில பகுதிகளில், குறிப்பாக திறந்தவெளியில் கிடைமட்டத் தன்மையை அடைவதால் தூரப்பார்வை குறந்து, தூசிப்பலம் உருவாகும் எனவும், இதன் காரணமாக கடலில் 6 அடிக்கு மேல் அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.
மேலும் தினசரி வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் அடிப்படையில் பகல் நேரங்களில்,மிதமான வானிலை மற்றும் ஓரளவு மேகமூட்டத்துடன் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் காற்று தென்கிழக்கில் இருந்து மிதமானதாக மணிக்கு 20 - 60 கிமீ வேகத்தில் இருக்கும்,சிதறிய மழையுடன் தூசிக்காற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது
இது, இரவைப் பொறுத்தவரை, குளிர்ந்த காலநிலையும், ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது, தென்கிழக்கு காற்று மிதமான வேகத்தில் மணிக்கு 12-35 கிமீ / வீசும், சிதறிய மழைக்கும் வாய்ப்புள்ளது.
வெப்பநிலை:
நாட்டின் பிராந்தியங்களுக்கு(இடங்களுக்கு) ஏற்ப பகலில் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 23 டிகிரி என்றும், இது இரவில் 15 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.