குவைத்தில் இன்று(20/12/2020) ஞாயிற்றுக்கிழமை வானிலை மிதமானதாக இருக்கும் என்றும், கிடைமட்டத் தன்மை படிப்படியாக மேம்படும் என்றும், காற்று வடமேற்கில் இருந்து பகல் நேரத்தில் மிதமாக மணிக்கு 08-30 கிமீ வேகத்திலும் மாறுபடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இரவைப் பொறுத்தவரை,குளிர்ச்சியாகவும், காற்று வடமேற்கு திசையில் இருந்து மிதமானதாகவும், மணிக்கு 06-28 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும், மேலும் சில பகுதிகளில் மூடுபனி உருவாக வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை:
நாட்டின் பிராந்தியங்களுக்கு இடையே பகலில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை 19 டிகிரி என்றும், இது இரவில் 11 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.