குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று(22/12/20) வெளியிட்டுள்ள அறிக்கையில் பகல் நேரத்தில் வானிலை மிதமான இருக்கும், வடமேற்குக்கு திசையில் இருந்து காற்று ஏற்ற இறக்கமாக மணிக்கு 08 முதல் 35 கிமீ வேகம் வீசக்கூடும் மற்றும் சில நேரங்களில் மேகமூட்டம் தோன்றும்.
இரவைப் பொறுத்தவரை,குளிரான காலநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது,மேலும் காற்று ஏற்ற இறக்கமாக மணிக்கு 6 முதல் 22 கிமீ வரையில் வீசக்கூடும்,சில மேகமூட்டம் தோன்றும்.
நாட்டின் பிராந்தியங்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக 20 டிகிரி முதல் குறைந்தபட்சமாக 7 டிகிரி வரை வெப்பநிலை மாறுபடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.