குவைத்தின் வானிலை ஆய்வு மையம் இன்று(28/12/20) வெளியிடப்பட்ட அறிக்கையில் பகல் நேரத்தில் குளிர்ந்த காலநிலையும், ஓரளவு மேகமூட்டமும் நிலவும் எனவும்,வடமேற்கு திசையில் இருந்து மிதமான காற்று மணிக்கு 10 - 32 கி.மீ வரை வீசக்கூடும் எனவும், லேசான மழைக்கான வாய்ப்புள்ளதாக,இது குறிப்பாக நாட்டின் தெற்கு பிராந்தியங்களில் ஏற்படலாம்.
இரவைப் பொறுத்தவரை, குளிர் காலநிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எதிர்பார்த்தது, மேலும் காற்று வடமேற்கு திசையிலிருந்து ஏற்ற இறக்கமாக மணிக்கு 08-28 கிமீ வேகம் வரையில் வீசக்கூடும்.
வெப்பநிலை:
நாட்டின் பிராந்தியங்களுக்கு ஏற்ப பகல் நேரத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகபட்சமாக வெப்பநிலை18 டிகிரி, இரவில் இது 10 டிகிரி வரையில் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது