(Photo Credit: APF)
குவைத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட பட்டதாரிகள் அல்லாதவர்களுக்கு வேலை ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான தடை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 60 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் அல்லாதவர்களுக்கு இந்த தேதியிலிருந்து வேலை ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டாம் என்ற முந்தைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
இருப்பினும், இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தங்களின் குழந்தைகள் மற்றும் கணவரின் Sponsoreship கீழ் தங்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை மாற்றி குவைத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் வேலை செய்ய முடியாது.மேலும் குவைத்தில் சுயதொழில்(Business) செய்பவர்கள் மனிதவள மேம்பாட்டு துறை குழு நிர்ணயித்த நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னர் தங்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை தங்கள் சொந்த Sponsoreship கீழ் மாற்ற அனுமதிக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில், இந்த மாதம் 31,2020 ஆம் தேதி வரை இப்படிப்பட்ட நபர்களின் விசா புதுப்பிக்க தடை விதிக்கப்படாது என்று மனிதவள அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய முடிவு இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய விசா முடியும் முறைக்கு தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.