குவைத்தின் வான்வழி, நிலம் மற்றும் கடல்வழி எல்லைகளை ஜனவரி 2,2021 முதல் மீண்டும் திறக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சிறிது நேரத்திற்கு முன்பு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டிற்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் விமானங்களை இயக்க விதித்துள்ள தற்போதைய தடை ஜனவரி 2 முதல் நீக்கப்படும். இதே நாளில் நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள நிலம் மற்றும் கடல் எல்லைகள் காலை ஒன்பது மணி முதல் மாலை மூன்று மணி வரை தினமும் திறக்க கவுன்சில் முடிவு செய்தது.
உலகளாவிய மரபணு மாற்ற கோவிட் பரவல் காரணமாக இந்த மாதம் 21-ஆம் தேதி முதல் குவைத் தனது எல்லைகளை மூட முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.மேலும் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான முன்னேற்றங்களின்படி தற்போதைய முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.