Dec-21,2020
ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழலில் சிறிது நேரத்திற்கு முன்பு அழைக்கப்பட்ட அவசர செய்தியாளர் கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மக்கள் அனைவரும் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் பசில் அல்-சபா அறிவித்துள்ளார்.
தொடர்ந்து குவைத் அரசாங்க தகவல் தொடர்பு பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான தாரிக் அல்-முஸ்ரிம், குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் மற்றும் புறப்படும் வர்த்தக விமானங்களை நிறுத்தி வைப்பதாகவும், புதியஉத்தரவு 2020 டிசம்பர் 21 திங்கள்(இன்று) உள்ளூர் நேரப்படி இரவு 11:00 மணி முதல் ஜனவரி 1, 2021 வெள்ளிக்கிழமை இரவு வரை நாட்டின் வான்வழி, நிலவழி மற்றும் கடல் எல்லைகள் மூடப்படுவதாக அறிவித்ததார். சரக்கு விமானங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த பிரச்சினை தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கோவிட் 19-க்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களை வலியுறுத்தினர். மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்கவும், பொது சுகாதாரத்தை பராமரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.