Dec-19,2020
குவைத்தின் Shuwaikh துறைமுகத்தின் வளைகுடா நாடுகளில் ஒன்றிலிருந்து வந்த கன்டெய்னரில் இருந்து பல்வேறு பொருட்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 650,000 அட்டைப்பெட்டிகளில் இருந்து, சுமார் 4 மில்லியன் பாக்கெட் புகையிலை போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து மிகப்பெரிய கடத்தல் முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில் வளைகுடா நாடுகளில் ஒன்றிலிருந்து 40 அடி கன்டெய்னர் Shuwaikh துறைமுகத்திற்கு வந்தது எனவும்,அதில் தலையணைகள், சக்கரங்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் போன்ற பல்வேறு பொருட்கள் இருந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகமடைந்து சோதனை செய்தனர், தொடர்ந்து 4 மில்லியன் பாக்கெட் புகையிலை சுமார் 650,000 அட்டைப்பெட்டிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன, புகையிலை பொருளாள் குவைத் சுங்க சட்டங்களின்படி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள பொருள் ஆகும். இது தொடர்பான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.