BREAKING NEWS
latest

Thursday, December 24, 2020

குவைத் சுகாதார அமைச்சர் பசில்-அல்-சபா அவர்கள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்

Dec-24,2020

சுகாதரத்துறை அமைச்சர் பசில் அல் சபா அவர்கள் மரபணு மாற்றம் ஏற்பட்ட புதிய கொரோனா வைரஸ் இதுவரையில் குவைத்தில் கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். குவைத்தில் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொரோனாவுக்கு எதிரான Pfizer-BioNTech COVID-19 தடுப்பூசியை அறிமுகம் செய்து வைத்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலாக அல்-சபா இதை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்......

கொரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் ஏற்பட்ட புதிய வகைகளை குறித்த பத்திரிகை செய்திகளை தவிர, வைரஸ் அல்லது அதன் மரபணு மாற்றங்கள் காரணமாக எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சுகாதார அமைப்புகள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறினார். 

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற பிறகு, தேவையான நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.


Add your comments to குவைத் சுகாதார அமைச்சர் பசில்-அல்-சபா அவர்கள் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்

« PREV
NEXT »