Dec-18,2020
அமெரிக்காவின் மருந்து நிறுவனமான ஃபைசர் உருவாக்கிய தடுப்பூசி பெற்ற முதல் குவைத்தி என்ற பெருமையை டாக்டர்.முஹம்மது சவுத் அல்-பர்ஜாஸ் அவர்களுக்கு சேரும். டாக்டர் லண்டனின் புர்கெஸ் பிரிட்டிஷ் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் இருதயநோய் ஆலோசகர் மற்றும் நிபுணராக சேவையாற்றி வருகிறார். தடுப்பூசி பெறுவதற்காக ஒப்புதல் அளித்த முதல் மருத்துவ ஊழியர்கள் குழுவில் இடம்பெற்ற நபர்களில் இவரும் ஒருவர் என்று அவர் கூறினார்.
தனக்கு தடுப்பூசி குத்திவைப்பதை அச்சமின்றி ஏற்றுக்கொண்டார் எனவும், தடுப்பூசியின் ஒவ்வொரு பரிசோதனை நிலைகளையும் அவர் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்ததே இதற்குக் காரணம் என்றார், அவர் மேலும் கூறுகையில் ஊசி வழங்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இயற்கை வலியைத் தவிர வேறு எந்த சிரமங்களையும் அவர் அனுபவிக்கவில்லை, ஊசி போடப்பட்ட வலி விரைவில் தணிந்தது.
ஊசி போட்ட பிறகு 15 நிமிடம் நோயாளி கண்காணிக்கப்பட்டார் எனவும், தனக்கு எந்த அலர்ஜி அல்லது பிற நோய்கள் எதுவும் தனக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த வழங்கப்பட்ட,ஒரு கேள்வி பதில் தாளை பூர்த்தி செய்து வழங்கியதாகவும். அதில் மூன்று வாரங்களாக இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசிக்கு எதிராக தடுப்பூசி போட மாட்டேன் என்றும் , கூடுதலாக ஃபைசர் தடுப்பூசி பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் அந்த தாளில் குறிப்பிட்டதாக அவர் கூறினார்.