குவைத்தில் பணிப்பெண்ணை Sponsore அவரது வீட்டில் வைத்து அடித்து கடுமையாக சித்திரவதை செய்து கொலை செய்த குற்றத்திற்காக குவைத் பெண்மணிக்கு மரண தண்டனையும்(தூக்கு தண்டனை) மற்றும் அவரது கணவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், கிரிமினல் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஜீன்லின் வில்லாவெண்டே(வயது-26) தனது முதலாளியின் வீட்டில் வைத்து கடந்த டிசம்பர் 28, 2019 அன்று கொல்லபட்டார். இந்த தீர்ப்புக்கு தொடர்பான குவைத் அரசுக்கு, குவைத்தில் உள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசு நன்றி தெரிவித்துள்ளது. அந்த நேரத்தில் இந்த கொலை தொடர்பான செய்தி அந்த நேரத்தில் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் வழக்கறிஞர், பாவ்ஸியா அல்-சபா கூறுகையில் தீர்ப்பு நியாயமானது என்றார், மேலும் அவர் கூறுகையில் பல நாட்களாக பாதிக்கப்பட்டவரை கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் அந்த பெண்ணை தனது அறையில் வைத்து இறக்கும் வரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் சிகிச்சையளிப்பதைத் தடுத்தனர் என்றும் கடுமையான சட்ட மீறல்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு வெளியிட்டபட்டுள்ளது.