Dec-16,2020
குவைத்தில் புதிதாக துவங்கப்பட்ட விஸ்மயா இன்டர்நெஷ்னல் கலை மற்றும் சமூக சேவை அமைப்பின் அதிகாரப்பூர்வ பதவியேற்பு நிகழ்ச்சி சிட்டி டவர்-குவைத் ஹோட்டலில் வைத்து திரு.ஹைடெக் ஜெயக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார். P.M.நாயர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், விஜு ஸ்டீபன் நிகழ்ச்சிக்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து ஜியாஷ் அப்துல் கரீமும் தனது நன்றி உரை நிகழ்த்தினார். அமைப்பின் சேவைகள் மற்றும் இயக்கங்கள் குறித்து விரிவாக அஜித்குமார் அவர்கள் நிகழ்ச்சிக்காக வந்திருந்த மத்தியில் விவரித்தார்.
இந்த அமைப்பு இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த சமூகத்தின், குறிப்பாக சாதாரண மக்களின் நியாயமான பிரச்சினைக்காக உடன்நின்று உதவி செய்யவும் மற்றும் வெளிநாடு வாழ் தொழிலாளர்கள் மறுவாழ்வு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலமும், கலை, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் நபர்களை பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்ள செய்து அவர்களின் நிகழ்ச்சிகளை விஸ்மயா சேனலில் நேரடியாக ஒளிபரப்புவதன் மூலமும் அவர்களை திறமையை பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட சேவைகளில் கவனம் செலுத்தும்.
தொடர்ந்து அதிகாரப்பூர்வ சின்னத்தை அமைப்பின் மேற்பார்வை பொறுப்புள்ள மனோஜ் மவேலிகாரா, பாபுஜி பத்தேரி,பி.ஜி.பினு ஆகியோர் வெளியிட P.M.நாயர் பெற்றுக்கொண்டார். இதையடுத்து P.M.நாயர் Chairman ஆகவும், ஹைடெக் ஜெயக்குமார் Vice Chairman ஆகவும், அஜித்குமார் தலைவராகவும், மகளிர் அணி தலைவியாக ஷைனி பிராங்க் அவர்களும், செயலாளராக விஜி ஸ்டீபன் அவர்களும் பொருளாளராக ஜியாஷ் அப்துல் கரீமும் நியமிக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பிற அலுவலக பொறுப்பாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அமைப்பின் செயல்பாடுகள் விரைவில் முழுவிசாக தொடங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கோவிட் விதிமுறைகளுக்கு இணங்க நடைபெற்ற இந்த விழாவில், இந்திய புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த சமூக, கலாச்சார மற்றும் ஊடக துறை பிரமுகர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
வினோத் விஸ்மயா அவர்கள் நடத்திய மேஜிக் ஷோ நிகழ்ச்சியில் கலந்துந்கொண்ட அனைவருக்கும் ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. அமைப்பின் முதல் நிகழ்வாக RJ ஆக பேசும் திறமையுள்ள நண்பர்களுக்காக போட்டி விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயிஷா கோபிநாத்தும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். விஸ்மயா இன்டர்நெஷ்னல் குவைத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் தனது சேவையை வழங்கும். தமிழ் உறவுகள் எளிதாக தொடர்பில் இருக்க விஸ்மயா இன்டர்நெஷ்னல் தமிழ் பிரிவு விரைவில் துவங்கும் என்று இதன் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.