இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் அவர்களின் குவைத்திற்கான சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை(திங்கள்) டிசம்பர்-28 ஆம் தேதி குவைத்தை வந்தடை திட்டமிடப்பட்டது. தொடர்ந்து 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்கள் குவைத்தில் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார். இந்த நாட்களில் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பல துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கத்தாருக்கான இன்றை(27/12/20) அமைச்சர் ஜெய் சங்கரின் சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளதன்படி நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கோவிட் தொற்றுநோய்க்கு பின்னர் வேலை இழந்த பல்லாயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு கதவுகளைத் திறந்து வைக்குமாறு ஜெயசங்கர் முன்னர் வளைகுடா நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதையடுத்து, அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைகள் மேற்கு ஆசிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் உள்ளதாக தெரிகிறது.
அமைச்சர் ஜெய் சங்கர் கடந்த மாதம் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றினார். பின்னர் அவர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வரலாற்று, கலாச்சார, பொருளாதாரம் மற்றும் மத உள்ளிட்ட வளைகுடா நாடுகளுடனான பலதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த மாத தொடக்கத்தில் வெளிவிவகார வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் ஓமானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.