புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களை அபுதாபி தடை செய்துள்ளது. மக்கள் வீடுகளில் அல்லது பொது இடங்களில் ஒன்றுகூட அனுமதி இல்லை மீறுபவர்களுக்கு 10,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். கோவிட் வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிசார் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
பொது கூட்டங்கள் அல்லது தனியார் கொண்டாட்டங்களை நடத்த ஏற்பாடு செய்து மக்களை அதற்கு அழைப்பவர்கள் நபர்கள் தண்டிக்கப்படுவார்கள். பொது இடங்களில் அல்லது பண்ணைகளில் கூட்டங்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கூட்டங்களில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் 5,000 டாலர் அபராதம் விதிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை மத்திய செயல்பாட்டுத் துறை இயக்குநர் பிரிகேடியர் அகமது சைஃப் அல் முஹைரி தெரிவித்தார்.
பட்டாசு போன்ற வானவேடிக்கைகள் ரசிக்கவும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும் வருபவர்கள் முகமூடி அணிந்து சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பொலிஸ் அதிகாரிகளுடன் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பொறுப்பற்ற முறையில் வாகனங்களை ஓட்டுவதற்கும், வாகனங்களில் இருந்து அதிக சத்தத்தில் இசையை வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது