மரபணு மாற்றம் ஏற்பட்ட வைரஸின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நாட்டில் அதை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் குறித்து வைரஸை எதிர்கொள்ள சமூக மற்றும் தனிப்பட்ட நபர்களின் ஆதரவு தேவை என்று சுகாதரத்துறை செய்தி தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல்-சனத்
சற்றுமுன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்
அறிக்கையின் விபரங்கள்:
1) குவைத்தில் இதுவரை மரபணு மாற்றம் ஏற்பட்ட புதிய கொரோனா வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
2) குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் Biduns-களுக்கு தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்.
3) தடுப்பூசி பெற பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 153,000 பேரை எட்டியுள்ளது.
4) கடந்த நாட்களில் முதல் டோஸ் பெற்றவர்களுக்கு எதிர்பாராத பக்க விளைவுகள் எதுவும் இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை.