ஓமானில் இருந்துஅபராதம் அல்லது தண்டனை இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற சரியான ஆவணங்கள் இல்லாமல்(சட்டத்திற்கு புறம்பாக உள்ளளவர்கள்) சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கான கருணை அடிப்படையில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு திட்டம் இன்று(31/12/20) முடிவடையும். கடந்த நவம்பர் மாதம் ஓமான் அரசு அறிவித்த இந்த திட்டத்தால் ஏற்கனவே 45,000 வெளிநாட்டவர்கள் பயனடைந்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் 26 ஆம் தேதி ஆன்லைன் பதிவு தொடங்கியதில் இருந்து, ஓமன் தொழிலாளர் துறை அமைச்சகம் வெளிநாட்டவர்களிடமிருந்து 45,715 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. இதில் சுமார் 3,000 இந்தியர்கள் பொதுமன்னிப்பு திட்டத்தின் மூலம் தாயகம் திரும்புவதற்காக இதுவரையில் பதிவு செய்துள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.