புதிய மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒரு வாரம் மூடப்பட்ட ஒமனின் எல்லைகளை டிசம்பர் 29 ஆம் தேதி மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் குழு முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் சர்வதேச விமான இயக்கங்களுக்கான தடையை டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை அதிகாலை 12 மணி முதல் நீக்கவும் உச்சநீதிமன்றம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) சற்றுமுன் முடிவு செய்துள்ளது. இதுபோல் ஓமனின் நிலம் வழி மற்றும் துறைமுகங்களையும் மீண்டும் திறக்க குழு முடிவு செய்துள்ளது.
சமீபத்திய புதிய கொரோனா பரவல் குறித்த முன்னேற்றங்களைப் படித்த பிறகு, மற்ற நாடுகளிலிருந்து ஓமானுக்கு வருவதற்கு முன்பு பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக குழு தெரிவித்துள்ளது. இதுபோல் ஓமானுக்கு 7 நாள்களுக்கு குறைவான தினங்கள் தங்கியிருக்க வரும் பார்வையாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை அது நீக்கியதாகவும் குழு கூறியுள்ளது.