Dec-19,2020
சவுதி சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 60,000 ரியாலுக்கு மேல் பணம், அதே மதிப்புடைய தங்கம் மற்றும் பொருட்கள் கைவசம் கொண்டு பயணிக்கு பயணிகள், முன்னரே அதற்கான இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி பெறவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்-அனுமதி பெறாமல் இப்படி கொண்டு செல்லும்போது பிடிபட்டால் அபராதம் செலுத்த வேண்டும், அதாவது முதல் முறையாக பிடிபட்டால் மொத்த மதிப்பில் 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும், இரண்டாவது முறை இதே குற்றத்திற்காக பிடிபட்டால் முழுவதும் அபராதமாக கருதி பறிமுதல் செய்யப்படும். பயணியின் கைவசம் உள்ள பணம்,தங்கம், காசோலைகள் சேர்த்து அதிகபட்சமாக 60,000 ரியாலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.