மரபணு மாற்றம் ஏற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த வாரம் சவுதி தனது அனைத்து எல்லைகளையும் முன்னறிப் பின்றி மூடியது. இதன் காரணமாக தாயகம் திரும்புவதற்கான காத்திருந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் சிக்கிகொண்டனர். இந்நிலையில் சவுதியில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியே தங்கள் நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாக சவுதி சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் மாலையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் வெளிநாட்டவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகக் கூறுகிறது.
சுற்றறிக்கையின் படி:
நாட்டின் உள்ள அனைத்து சவுதி அல்லாத வெளிநாட்டினரும் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பயணிகளை அழைத்துச் செல்ல விமான நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் வெளிநாட்டிலிருந்து யாரும் சவுதிக்கு வர அனுமதி இல்லை. வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த நோக்கத்திற்காக சேவைகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் விமானங்கள் மூலம் சவுதி விமான நிலையங்களில் வரும் விமான ஊழியர்கள் கோவிட் நெறிமுறைகளை மீறி வெளியேறவும் மற்றவர்களுடன் உடல் தொடர்பு கொள்ளவும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது உள்ளிட்ட கடுமையான முன்னெச்சரிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட் வைரஸ் தனது இரண்டாவது வருகையை அடையாளப்படுத்திய நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார். இதன் கூடுதல் தெளிவான விளக்கங்கள் அடுத்த மணிநேரங்களில் தெரிய வரும்