Dec-21,2020
சவுதியின் வான்வழி,கடல்வழி மற்றும் சாலைகள் வழியாக அனைத்து பாதைகளும் இன்று(21/12/20) திங்கள்க்கிழமை முதல் மீண்டும் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பு இன்று அதிகாலையில் திடிரென சவுதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 யின் இரண்டாம் கட்ட பீதி நிலவும் சூழலில் இந்த அதிரடி முடிவு என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து விமானங்களின் இரு வழி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது மற்றும் கப்பல், சாலைகள் வழியான சவுதியில் நுழையவும் முடியாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எந்தவொரு வழியாகவும் சவுதிக்குள், ஒரு வாரகாலம் யாரும் நுழையவோ.... வெளியேறவோ....முடியாது.
நாம் அனைவருக்கும் தெரிந்தது போல் மற்ற வளைகுடா நாடுகளை போலவே கோவிட்-19 நோய்தொற்றுக்கு எதிராக போராடி மிக விரைவாக வெற்றியும் கண்ட நாடுகளில் சவுதி அடங்கும். கடந்த இரண்டு வாரங்களாக தினசரி நோய்தொற்று பாதிப்பு விகிதம் 100 முதல் 150 ற்குள் இடையே பதிவாகிய வண்ணம் உள்ளது. இதையடுத்து ஜனவரில் வெளிநாட்டினர் சவுதியில் நுழைய விமானங்கள் சேவைகள் துவக்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் முக்கியமாக ஐரோப்பியா நாடுகளில் கோவிட்-19 யின் இரண்டாம் கட்டம் தீவிரமடைந்துள்ளது எனவும், இதையடுத்து டிசம்பர்-8 ற்கு பிறகு சவுதியில் நுழையந்த பெரும்பாலான நபர்களிடம் இந்த நோய்தொற்று அதிக அளவில் பதிவாகியுள்ளது எனவும், இதையடுத்து இந்த புதிய முடிவு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவின் விதிமுறைகள்:
1) டிசம்பர்-8 ற்கு பிறகு ஐரோப்பியா நாடுகளில் இருந்த சவுதியில் நுழைந்த யாராக இருந்தாலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும் எனவும், 5 நாட்களுக்கு ஒருமுறை கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், நோய்தொற்று எதிர்மறை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
2) இதுபோல் கடந்த 3 மாதங்களுக்குள் ஐரோப்பியா நாடுகளுக்கு சென்று வந்திருந்தால் அவர்களும் தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும் எனவும், 5 நாட்களுக்கு ஒருமுறை கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
3) அதே நேரத்தில் அறிவிப்பு வெளியான நேரத்தில் சவுதிகுள் நுழைந்த மற்ற நாடுகளின் விமானங்கள் மட்டும் இன்று(21/12/2020) கிளம்ப வேண்டிய பயணிகளை அழைத்து கொண்டு செல்ல முடியும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தற்காலிக தடை, மேலும் இன்னொரு வாரத்திற்கு நீட்டிக்கவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு ஒரு வாரத்திற்கு பிறகு தெரியவரும்.