Dec-25,2020
குவைத் அரசு,நாட்டில் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மக்கள் அதிகமாக வந்து செல்லும் முன்னணி வணிக வளாகங்களான 360-மால் மற்றும் அவென்யூ ஆகியவற்றில் சிறப்பு ரோந்து பாதுகாப்புப் படையினரை நிறுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக இதுபோன்ற ஷாப்பிங் மால்களில் வைத்து தாக்குதல்கள் மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் ஷேக் தமர் அல்-அலி அவர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க,வரும் நாட்களுக்குள் பாதுகாப்புப் படையினர் நாட்டின் பிற மால்களில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்படுவார்கள் என்றும் உள்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அலி அவர்கள் உத்தரவில்,சட்டத்தை மீறும் பொறுப்பற்றவர்களை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டார்.
மேலும் டிசம்பர் 24(வியாழக்கிழமை) நேற்று முதல் 2021 ஜனவரி 10 வரை தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் மூடபட்டு இருக்கும் மற்றும் பொது இடங்களில் இந்த நாட்களில் ஒன்றுகூடுவதை முற்றிலுமாக தடைசெய்து உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.