Dec-20,2020
எமது முன்னைய அறிவித்தலின் பிரகாரம் கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் கொன்சியுலர் சேவைகளைப் ( பிறப்பு / இறப்பு / திருமண பதிவுகள் / குடியுரிமைச் சான்றிதழ் / வாகன ஓட்டுனர் உரிமம் / அடோர்னி அதிகார ஆவண உறுதிப்படுத்தல் போன்றன ) பெற்றுக் கொள்ள வருகை தருவோர் முற்கூட்டியே நேரமொன்றை ஒதுக்கிக் கொள்வது அவசியமாகும்.
முற்கூட்டியே நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டு தூதரகத்துக்கு வருகை தர விரும்பினால் slemb.kuwait@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் வாயிலாக எம்மைத் தொடர்பு கொண்டு நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியும் . 2020.12.20 ஆம் திகதி முதல் கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் கொன்சியுலர் சேவைகளைப் பெற வருகை தருவோர் முற்கூட்டியே நேரமொன்றை ஒதுக்கிக் கொள்ள முடியாதவிடத்து நேரடியாக வருகை தர முடியும் என்பதனையும் அறியத் தருகிறோம் .
கடவுச்சீட்டு விண்ணப்பம் மற்றும் கொன்சியுலர் பிரிவின் சேவைகள் ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை காலை 08.30 முதல் நண்பகல் 12.30 வரை பெற்றுக் கொள்ள முடியும். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்து கடவுச்சீட்டைப் பெற விண்ணப்பிக்க விரும்பும் பெற்றோர் தமது கடவுச்சீட்டின் பிரதியை 61682 , எனும் இலக்கத்துக்கு வட்ஸ்அப் ( WhatsApp ) வழியாக அனுப்பி வைக்கவும் .
பதிவு நடவடிக்கைகள் தொடர்பிலான விபரங்கள் உங்களுக்கு வட்ஸ்அப் ( WhatsApp ) வாயிலாக அனுப்பி வைக்கப்படுவதோடு பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள தூதரகத்துக்கு வருகை தர பொருத்தமான ஒரு நேரமும் வழங்கப்படும் என்பதனையும் அறியத் தருகிறோம்.