சவுதி மற்றும் குவைத் நாடுகள் புதிய மரபணு மாற்ற கொரோனா பரவுவதைத் தடுக்க தங்கள் எல்லைகளை தீடீரென மூடிய பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவிக்கும் சுமார் 300 இந்திய வெளிநாட்டினருக்கு இலவச தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாக அமீரக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளிலிருந்து சவுதி மற்றும் குவைத்திற்கு நேரடி விமானங்கள் இல்லாததால், சவுதி மற்றும் குவைத்தில் நுழைய ஐக்கிய அரபு எமிரேட்ஸை தற்காலிக புகலிடமாக பயன்படுத்திய வந்தனர். அமீரகத்தில் ஹோட்டல்களிலும், பிற குடியிருப்புகளில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், சான்றிதழ் பெற்று அவர்கள் வேலை செய்துவந்த நாடுகளும் நுழைய இருந்த நிலையில் இப்படி மாட்டிக் கொண்டனர். இப்படிப்பட்ட பலருக்கும் 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிந்த நிலையில் சவுதி மற்றும் குவைத்தில் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் நிலைய அறிந்த துபாய் மார்க்காஸ் மையத்தின் தன்னார்வலர்களின், இந்திய கலாச்சார அறக்கட்டளை (ஐ.சி.எஃப்) , அமீரக கட்டுமான நிறுவனமான ஆசா குழுமத்துடன் இணைந்து, சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு பிரச்சினை முடியும் வரையில் இலவச தங்குமிடம் மற்றும் உணவை ஏற்பாடு செய்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.