Dec-15,2020
குவைத் இந்திய தூதரகத்தின் உதவியுடன், சமூக ஆர்வலர்கள் முயற்சி மூலம் இந்தியா,தமிழகம், திருவண்ணாமலையை அடுத்த தெற்கு ஆர்காடு பகுதியை பூர்வீகமாக கொண்ட தாஜ்-பேகம் தாயகம் சென்றார்.
தாஜ்-பேகம் கடந்த 30 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வந்தார், இந்நிலையில் வயது முதிர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு மூலம் சபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து அவரை திருப்பி தாயகம் அனுப்ப என்ன செய்வது என்று தெரியாமல் பேரன் அலி, ICF அமைப்பு பிரதிநிதிகளை தொடர்பு கொண்டார்.
அப்போது ICF அமைப்பு செயலாளர் சமீர் தலைமையிலான குழுவினர் இந்திய தூதரகத்தின் Community பிரிவை தொடர்பு கொண்டார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் அதிகாரிகளை இந்திய தூதராக அதிகாரிகள் தொடர்பு கொண்டு தாஜ்-பேகமின் மருத்துவ செலவுகளை தள்ளுபடி செய்தனர்.
மேலும் தூதரகம் சார்பில் பயணச்சீட்டு பெற்று, அவரை சம்பந்தப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தாயகம் அனுப்பி வைத்தனர். கடந்த 7 வருடங்களாக பேகம் விசா இல்லாமல் குவைத்தில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.