Dec-15,2020
ஓமனில் இருந்து விசைப்படகு மூலம் சுமார் 2800 கிலோமீட்டர் தப்பித்து பயணம் செய்து கன்னியாகுமரி வந்த தமிழர்கள் சர்வதேச சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முட்டம் மற்றும் மேல-முட்டம் பகுதியை சேர்ந்த 5 தமிழர்கள் மற்றும் வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர், ஓமனில் இருந்து 9 நாட்களாக உயிரை பணயம் வைத்து சுமார் 2800 கிலோமீட்டர் பயணம் செய்து தாயகம் வந்துள்ளனர்.
கடந்த 8 மாதங்களாக ஓமனில் தங்கியிருந்த நிலையில், முதலாளி(Sponsore) கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காத காரணத்தால் இந்திய தூதரகத்தில் புகார் கொடுத்தனர். இந்த தகவலறிந்த முதலாளி இவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகின்றது. இதையடுத்து உயிருக்கு பயந்து கடந்த 4-ஆம் தேதி முதலாளியின் விசை படகில் சிலரது உதவியுடன் தேவையான உணவு மற்றும் விசைப்படகை செலுத்த தேவையான எண்ணெய் ஆகியவற்றுடன்,இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தாயகம் திருப்பினர்.
தொடர்ந்து தாயகம் திரும்பிய அவர்களுக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறினர். இதையடுத்த இவர்களின் ஓமன் முதலாளி அப்துல்லா கொடுத்த புகார் அடிப்படையாக கொண்டு தமிழக போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் கைவசம் இல்லாமல் சர்வதேச எல்லையை கடந்தது உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.