அபுதாபியில் ஜனவரி 2 முதல் டோல் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது. தனியார் வாகனங்கள் ஒவ்வொரு முறையும் டோல் கேட் வழியாக செல்லும்போது நான்கு திர்ஹாம் வசூலிக்கப்படும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 16 திர்ஹம் வரவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற நேரங்களில் பயணிக்க டோல் கட்டணம் இல்லை. மூத்த குடிமக்கள், ஓய்வுபெற்ற குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்
ஆம்புலன்ஸ், ராணுவ வாகனங்கள், சிவில் பாதுகாப்பு மற்றும் பிற எமிரேட்ஸில் இருந்து வரும் போலீஸ் வாகனங்கள், உள்துறை அமைச்சகம், அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட பொது டாக்சிகள், ஐ.சி.டி உரிமம் பெற்ற பள்ளி பேருந்துகள், 26 க்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட போக்குவரத்து பேருந்துகள், மோட்டார் பைக்குகள் மற்றும் கயிறு கட்டி இழுத்துச் செல்லும் வாகனம் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும். இதற்கு இந்த பிரிவில் உள்ளவர்கள் DARB இணையதளத்திலும் பதிவு செய்யப்பட வேண்டும்.பதிவு செய்த பிறகு விலக்குக்கு விண்ணப்பிக்கலாம்.
தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர கட்டண வரம்பும் உள்ளது. முதல் வாகனத்திற்கு 200 திர்ஹம் மற்றும் இரண்டாவது வாகனம் 150 திர்ஹம் செலவாகும். அடுத்தடுத்த ஒவ்வொரு வாகனத்திற்கும் 100 திர்ஹம் கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், நிறுவனத்தின் வாகனங்களுக்கு தினசரி மற்றும் மாதாந்திர வரம்புகள் பொருந்தாது. ஷேக் சயீத் பாலம், ஷேக் கலீஃபா பாலம், முசபா பாலம் மற்றும் அல் மக்தா பாலம் ஆகியவற்றில் டோல் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீங்கள் https://darb.itc.gov.ae/RucWeb/login வலைத்தளத்தின் மூலமாகவோ அல்லது டார்ப் மொபைல் பயன்பாட்டின் மூலமாகவோ கட்டண முறைமையில் பதிவு செய்யலாம். குறைந்தபட்ச பதிவு கட்டணம் ஒரு வாகனத்திற்கு 100 திர்ஹம்,இதில் 50 திர்ஹம்கள் கணக்கில் திருப்பி ஏறும்,இதை கட்டணத்தை செலுத்த பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு போக்குவரத்துத் துறையை 800 88888 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.