BREAKING NEWS
latest

Tuesday, December 22, 2020

குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வந்தே பாரத் விமானங்கள் ரத்து

Dec-22,2020

புதிதாக  மரபணு மாற்றம் ஏற்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் குவைத்,ஓமன், சவுதி தங்கள் வான்வழி உள்ளிட்ட அனைத்து எல்லைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது. 

இதையடுத்து இந்த நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்துவரும் வந்தே பாரத், சார்டட் மற்றும் தனியார் விமானங்கள் பின்வரும் நாடுகளில் நுழைய தடை உள்ளது. இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா தனது இணையதளத்தில் பின்வரும் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

அதில் டிசம்பர்-21 முதல் குவைத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோல் ஓமனில் இருந்து டிசம்பர்-22 முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து சேவைகளையும் ரத்து செய்வதாகவும் மற்றும் சவுதியில் இருந்து டிசம்பர்-21 முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகள்(UK) யில் இருந்து டிசம்பர்-22 இன்று நல்லிரவு முதல் டிசம்பர்-31 வரையில் முதல்கட்டமாக விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


Add your comments to குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வந்தே பாரத் விமானங்கள் ரத்து

« PREV
NEXT »