BREAKING NEWS
latest

Saturday, December 26, 2020

வளைகுடாவில் குளிர் காலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்;பணிப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

Dec-26,2020

குவைத் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கடந்த சில நாட்களாக குளிர் துவங்கியுள்ளது. இந்நிலையில் அமீரகத்தில் நேற்று பணிப்பெண்(வயது-29) ஒருவர் விஷவாயு சுவாசித்த நிலையில் உயிருக்கு ஆபத்தாக ஷார்ஜாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பணிப்பெண் தன்னுடைய அறையில் உள்ளே உள்ள குளிரை வெளியேற்ற கரியை(Charcoal) பற்றவைத்து அறைக்குள் வைத்துள்ளார். Al-Siyuh-3 உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாக ஷார்ஜா போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பணிப்பெண் ஆபத்தான நிலையில் காணப்பட்டதாக ஸ்பான்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார். 

இதையடுத்து ஷார்ஜா அவச உதவி ஆம்புலன்ஸ் மற்றும் துணை மருத்துவக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் இறைச்சியை வேகவைக்க கரி பயன்படுத்தப்பட்டது. வேலை முடிந்த பிறகு வேலைக்காரியிடம் தீயை அணைக்க முதலாளி அறிவுறுத்தினார்.  ஆனால் தீயை அணைக்காமல், அந்த இளம் பெண் கரியை தனது அறைக்கு கொண்டு சென்றாள் என்று அவர் தெரிவித்தார். 

மறுநாள்(நேற்று) காலையில் பணிப்பெண் சமையலறைக்கு வராதபோது சோர்வு காரணமாக  தூங்கிவிட்டதாக நினைத்ததாக ஸ்பான்சர் கூறினார். பின்னர் நான் அறைக்குச் சென்று அழைத்தபோது எந்த பதிலும் இல்லை. கதவு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து குடும்ப உறுப்பினர் ஒருவர் ஜன்னலை உடைத்தபோது பணிப்பெண் உள்ளேஅசைவின்றி படுத்துக் கிடப்பதை கண்டார். மேலும் அவரது வாயிலிருந்து நுரை மற்றும் சளி வெளியே வந்தவண்ணம் இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அந்த இளம் பெண் இரண்டு ஆண்டுகளாக இந்த வீட்டில் வேலை செய்து வருகிறார். சிகிச்சையில் உள்ள அந்த பெண் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மூடிய அறையில் இதுபோன்ற விபத்துக்கள் குறித்து ஸ்பான்சர்கள் தொழிலாளர்களை எச்சரிக்க வேண்டும் என்று ஷார்ஜா போலீசார் தெரிவித்தனர்.  பல இடங்களில் மக்கள் இதைச் செய்கிறார்கள், இது பெரிய விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் இதுபோன்று குளிர்காலத்தில் வளைகுடாவில் பல தொழிலாளர்கள் உயிரிழக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குவைத்தில் தமிழக இளைஞர் ஒரு உயிரிழந்தார் மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இது போன்று பல சம்பவங்கள் குவைத்தில் மட்டுமே நடந்துள்ளன. இப்படி குளிர்காய கரி பயன்படுத்தினால் கண்டிப்பாக காற்று உள்ளே வந்துச் செல்லும் வகையில் எச்சரிக்கையாக ஜன்னல்களை திறந்து வையுங்கள்.



Add your comments to வளைகுடாவில் குளிர் காலத்தில் இதை யாரும் செய்யாதீர்கள்;பணிப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

« PREV
NEXT »