Dec-22,2020
மலேசிய அரசு தொழில் சட்டத்தை மீறிய வெளிநாட்டு தொழிலாளர்கள் குறைந்த அபராதத் தொகையை செலுத்தி தாயகம் செல்லும் வாய்ப்பு 21-12- 2020(திங்கள்க்கிழமை) நேற்று முதல் வழங்கியுள்ளது. நீண்டகாலமாக விசா இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக உள்ள தொழிலாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தாயகம் செல்லலாம்.
இதற்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்:
1. குடிநுழைவுத்துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
இணைய தளத்தின் Link: http://sto.imi.gov.my
2. முன்பதிவு தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் விமானப் பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.
3. கடவுச்சீட்டின்( Passport) முன்பக்கம் பின்பக்கம் மற்றும் மலேசியாவுக்குள் இறுதியாக நுழைந்த தேதியின் முத்திரை உள்ள பக்கம் ஆகிய மூன்றையும் நகல்கள் எடுக்க வேண்டும்.
4. மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் நீங்கள் முன்பதிவு செய்து பெற்ற தேதியில் நேரடியாக சென்று அபராத தொகை ரிங்கிட்-500 செலுத்தி அனுமதி பெற்ற பிறகு, நீங்கள் தாயகம் திரும்புவதற்கு விமான பயண தேதி இருநாட்கள் இருக்கையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இந்த சலுகை ஜூன்-30,2021 வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும், மத்திய அரசு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானப் பயண சீட்டு விலையை குறைத்தாலோ அல்லது தமிழக அரசு குறைந்த விலையில் பயணச்சீட்டு வழங்கி விமானத்தை அனுமதித்தாலோ எண்ணற்ற இந்தியர்கள் உயிரோடு தாயகம் திரும்பி தன் குடும்பத்தோட இணைந்து விடுவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.