ஓமானில் பேஸ்புக்கில் பதிவிட்ட பின்னர் இந்தியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்;ஓமானின் இப்ராவில் ஜே.சி.பி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த பிரசாந்த், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிஸ்வா
ஓமானில் பேஸ்புக்கில் பதிவிட்ட பின்னர் இந்தியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்;ஓமானின் இப்ராவில் ஜே.சி.பி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த பிரசாந்த், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிஸ்வா
ஓமானில் பேஸ்புக்கில் குறுஞ்செய்தி பதிவிட்ட பின்னர் இந்தியர் ஒருவர் தூங்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்திய,கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம்,கோநி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(வயது-33) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை குறிப்பை பேஸ்புக்கில் பதிவிட்ட பின்னர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. பிரசாந்த் வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணியளவில் "தகுதி இல்லாதவர் நீங்கி நில்லுங்கள்;தற்கொலை செய்து எப்படி என்பதை அண்ணன் நான் காட்டுகிறேன்" என்றே தற்கொலைக் குறித்த பதிவை எழுதினார் என்று கூறப்படுகிறது.
ஓமானின் இப்ராவில் ஜே.சி.பி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்த பிரசாந்த், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நிஸ்வா பகுதியில் வேலைக்கு வந்தடைந்தார் எனவும், அவர் வேலைக்காக பயன்படுத்திய ஜே.சி.பி-யின்(JCB HAND) கையை உயர்த்தி அதிலேயே தூக்கிட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி நிஸ்வா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சட்ட நடவடிக்கை முடித்து உடலை திருப்பி தாயகம் அனுப்பும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
முன்னர் இவருடைய பதிவு ஒரு நகைச்சுவை என்றே நண்பர்கள் நினைத்தார்கள், ஆனால் அவரது நெருங்கிய நண்பர்கள் அவருடைய தற்கொலை குறித்த தகவலை அடுத்த சில மணி நேரங்களில் அறிந்த நிலையில் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேஸ்புக் பதிவில் வெளியாகியுள்ள இடுகையைத் தொடர்ந்து, பலர் தங்கள் வருத்தத்தையும் அஞ்சலையும் பகிர்ந்து கொண்டனர்.இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது