BREAKING NEWS
latest

Tuesday, January 12, 2021

குவைத்தில் வெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு 2.5 சதவீதம் வரி விதிக்க பாராளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் மசோதா தாக்கல்

குவைத்திலிருந்து பணம் அனுப்புவதற்கு வரி விதிக்க கோரி தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சில உறுப்பினர்கள் நேற்று முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான ஒசாமா அல்-ஷாஹீன், அப்துல் அஜீஸ் அல்-சகாபி, ஹமாத் அல்-மத்வார், சுஹைப் அல்-முவைசிரி மற்றும் காலித் அல்-ஒடாய்பி ஆகியோர் வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினர். அந்த வரைவு மசோதாவில் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டினர்கள் அனுப்பும் பணத்திற்கு நாடுகள் வழியாக எந்த வேறுபாடுகளும் இன்றி 2.5 சதவீத வரி விதிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரைவு மசோதா மூலம் ஆண்டுக்கு குறைந்தது 100 மில்லியன் தினார்களை பொது பட்ஜெட்டில் கொண்டு வந்தால், நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என்றும், வெளிநாட்டினர் வீட்டுக்கு அனுப்பும் பணத்தின் அளவைக்  இந்த சட்டம் கட்டுப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்காக 1969 ஆண்டின் உருவாக்கபட்ட அந்நிய செலாவணி சட்டத்தின் விதி 32 ஐ திருத்த செய்ய வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளூர் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க  குவைத்தின் மத்திய வங்கியிடம் இந்த புதிய வரைவு தீர்மானம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பான சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான அபராதம் விதிக்க வேண்டும், மேலும் வெளிநாட்டில் படிக்கும் குவைத் மாணவர்கள் மற்றும் சிகிச்சை பெறும் குவைத் மக்களுக்கு விலக்க அளிக்க வேண்டும் என்றும் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்ற கோரிக்கையுடன் கடந்த பல நாடாளுமன்றத்தில் கூட்டங்களில் மசோதாக்கள்  அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், பாராளுமன்றத்தில் இதற்கான ஒப்புதல் இல்லாததால் அதை செயல்படுத்த முடியவில்லை. ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே மேலதிகமாக இருக்கும் தற்போதைய புதிய நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கான பலவழிகளை அரசாங்கம் தேடும் நேரத்தில், இந்த மசோதாவுக்கு அரசாங்க சார்பு உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Add your comments to குவைத்தில் வெளிநாட்டினர் அனுப்பும் பணத்திற்கு 2.5 சதவீதம் வரி விதிக்க பாராளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் மசோதா தாக்கல்

« PREV
NEXT »