BREAKING NEWS
latest

Monday, January 11, 2021

சவுதியில் தொழில் சட்டத்தை மீறிய 36 தமிழர்கள் உட்பட 285 இந்தியர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர்



சவுதியில் வேலை மற்றும் விசா சட்டங்கள தொடர்பான மீறல்களுக்காக மேலும் 285 இந்தியர்கள்  இன்று(11/01/21) திங்கள்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர். தமாமில் உள்ள நாடுகடத்தல் மையத்திற்கு இருந்து கொண்டு செல்லப்பட்ட இவர்கள்,தமாம் விமான நிலையத்திலிருந்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சவுதியில் இருந்து இன்று நாடுகடத்தப்பட்ட நபர்களில் கேரளாவை சேர்ந்த 8 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 20 பேர், பீகாரை சேர்ந்த18 பேர், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 13 பேர், ராஜஸ்தானை சேர்ந்த 12 பேர், தமிழ்நாட்டிலிருந்து 36 பேர், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 88 பேர், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 60 பேர் உள்ளிட்டவர்கள் அடங்குவர், இகாமா புதுப்பிக்கப்படாதது, ஹுருப் வழக்கு மற்றும் தொழிலாளர் சட்ட மீறல் ஆகிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இதற்கிடைய கடந்த புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சட்டங்களை மீறிய 580 இந்திய ரியாத்தில் இருந்து வீடு திரும்பினர்.  தமாமில் கைது செய்யப்பட்டவர்களும் இந்த குழுவில் இருந்தனர். கோவிட் தொடங்கிய எட்டு மாதங்களில், சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை இதையடுத்து 4,608 ஆக உயர்ந்துள்ளது.

Add your comments to சவுதியில் தொழில் சட்டத்தை மீறிய 36 தமிழர்கள் உட்பட 285 இந்தியர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர்

« PREV
NEXT »