சவுதின் வடமேற்கு பகுதியான தபுக் நகரில் பஸ் சாலையில் வேகமாக சென்றுக் கொண்டு இருந்தபோது, திடிரென சாலையின் நடுவே ஒட்டகம் புகுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிழந்தர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். பஸ் ஒட்டகத்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் சபக் செய்தித்தாளிடம் தெரிவித்தனர்.
சவுதி ரெட் கிரசண்ட் தகவல் மையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை(நேற்று) மாலை 05.03 மணியளவில்,சவுதி ஜஹ்ராவில் டைமா கவர்னேடடில் சென்றுக் கொண்டு இருந்த பேருந்து விபத்து கிச்கியதாக செய்தி வந்தது என்று ரெட் கிரசண்டின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகைதில் ரெட் கிரசண்ட், சுகாதார அமைச்சகம் மற்றும் சிவில் பாதுகாப்பு துறை ஆகிய பிரிவுகளின் அவசர உதவிக் குழுக்களை சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் எனவும்,சிவில் பாதுகாப்பு வீரர்கள் முயற்சி மூலம் கவிழ்ந்த பஸ்ஸிலிருந்து மூன்று இறந்தவர்கள் உடல்களை மீட்டனர் என்றும், மேலும் படுகாயங்களுடன் 16 பேர் தைமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதைதவிர சிறிய காயங்கள் ஏற்பட்ட 14 பயணிகளுக்கு சம்பவ இடத்திலே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தில் சிக்கி உயிரிழந்த பயணிகள் மற்றும் காயமைடந்த பயணிகள் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரம் எதுவும் தெரியவில்லை.