குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக வெளியேறும்(புறப்படும்) ஒவ்வோரு பயணிகளிடமிருந்தும் பயணச்சீட்டு கட்டணத்துடன் கூடுதலாக 3 தினார்கள் வசூலிக்கப்படும்
Image: Kuwait Airport
குவைத்தில் இருந்து புறப்படும் ஒவ்வோரு பயணிகளிடமிருந்தும் பயணச்சீட்டு கட்டணத்துடன் கூடுதலாக 3 தினார்கள் வசூலிக்கப்படும்
குவைத் சர்வதேச விமான நிலையம் வழியாக ஒரு பயணியின் இருவழி பயணத்திற்காக மொத்தம் 5 தினார்கள் சேவை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த புதிய அறிவிப்பு அடிப்படையில் புறப்படும் ஒவ்வொரு பயணிகளிடமிருந்தும், நீங்கள் விமான பயணச்சீட்டு எடுக்கும் நேரத்தில்,கட்டணத்துடன் சேர்த்து கூடுதலாக 3 தினார்கள் வசூலிக்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் சேவை விவாகரங்களுக்கான அமைச்சர் டாக்டர். அப்துல்லா மராபி அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இந்த தொகையானது விமான நிலைய பயணிகளுக்கான சேவை மற்றும் செயல்பாட்டு (Airport Services and Operation) கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதேபோல் குவைத்துக்கு வரும் பயணிகளிடம் 2 தினார்கள் கூடுதலாக கட்டணமாக வசூலிக்கப்படும்.
இது தொடர்பான குவைத் சிவில் ஏவியேஷன் கமிஷனின் செய்தித் தொடர்பாளர் சாத்-அல்-ஒதேபி கூறுகையில், இந்த புதிய கட்டணம் முந்தைய முடிவை அடிப்படையில் எடுக்கப்பட்டவை எனவும், விமான நிலைய சேவை கட்டணம் நீண்ட காலத்திற்கு முன்பு 8 தினார்களாக நிர்ணயிக்கப்பட்டது எனவும், ஆனால் சேவை கட்டண அடிப்படை விகிதத்திலிருந்து 3 தினார்களால் குறைக்கப்பட்டு,புதிய கட்டணமாக இரு திசைகளுக்கும் சேர்த்து 5 தினர்களாக இருக்கும் எனவும்,இது உலகின் மிகக் குறைந்த சேவை வீதம் என்று தெளிவுபடுத்தினார்.
இந்த கூடுதல் கட்டணம் செலுத்துவதில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியாக செலுத்த வேண்டும் எனவும்,குவைத் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற விமான நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் கட்டணம் வசூலிப்பதற்கான வழிமுறைகள் எற்படுத்தப்படும் எனவும், புதிய முடிவு ஜூன் 1,2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று அப்துல்லா மராபி தெளிவுபடுத்தினார்.மேலும் விமான நிலைய பராமரிப்பு மற்றும் நாட்டின் வருவாயை அதிகரிப்பதே கட்டண உயர்வின் நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.