குவைத்திற்கு 35 நாடுகளில் இருந்து நேரடியாக நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை அதிதீவிர புதிய கொரோனா பரவல் காரணமாக தொடரும் என்று இன்று கூடிய அமைச்சரவை அறிவித்துள்ளது. பல நாடுகளில் கடுமையான வைரஸ் தாக்கம் இருப்பதாக தகவல்கள் வந்ததை அடுத்து சுகாதார அமைச்சகத்தின் சிறப்பு உத்தரவின்படி இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ஷேக் அல் சபா காலித் தலைமை தாங்கினார். அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு தணிக்கை ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்து ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாமதமாகும் நாட்டின் ஒவ்வொர திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் அமைச்சரவையில் தெரிவித்தார். அடுத்த கட்டமாக அனைத்து அரசு துறைகளிலும் ஊழல் இல்லாத ஆட்சியை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க அவர் அமைச்சர்களிடம் கூறினார்.