குவைத் மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வீட்டுத் தொழிலாளர்கள் தொடர்பாக பதிவாகியுள்ள மொத்த புகார்களின் எண்ணிக்கை 6,782 ஆகும்.
இதில் இரு கட்சிகளுக்கிடையில் பேசி சமரசமாக தீர்க்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 185 புகார்கள், அதே நேரத்தில் தீர்க்கப்படாத வழக்குகள், தொழிலாளர்கள் தப்பி ஓடியதாகக் கூறப்படும் வழக்குகள் உட்பட 186 வழக்குகள் தொழிற்துறை சார்ந்த நீதிமன்ற துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,குவைத்தில் உண்மையாக பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு தொழிலாளர்கள் ஆட்சேர்ப்பு அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை 464 ஆகும். அதே நேரத்தில் உள்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 1533 ஆகும் என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.